சைனோபாம் இரு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது!

175 0

நாட்டில் கொவிட் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டில் சைனோபாமின் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அதற்கமைய, நாட்டில் சைனோபாம் பூரண தடுப்பூசி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று (15) இவ்வாறு ஒரு கோடியைக் கடந்ததாக ஔடத உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.