யோஷிதவின் பாட்டி பிணையில் விடுதலை!!

296 0

625-500-560-350-160-300-053-800-900-160-90யோஷித ராஜபக்சவின் பாட்டியான டெசி ஃபோரஸ்டி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

36 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை எப்படி சம்பாதித்தார் என்பதை உறுதிப்படுத்த தவறிய குற்றச்சாட்டில் அவருக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர், டெசி ஃபேரஸ்டி விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனக் கூறியுள்ளனர்.

வாக்குமூலம் வழங்க வருமாறு ஆறு முறை அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் வருகை தரவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 15 இலட்சம் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளிலும் டெசி ஃபோரஸ்டியை விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்ட நீதிமன்றம், நாளைய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது.

டெசி ஃபோரஸ்டி என்ற யோஷித்த ராஜபக்சவின் பாட்டியார் பெயரில் தெஹிவளை, கல்கிஸ்சை பிரதேசங்களில் பல இலட்சம் ரூபா பெறுமதியான காணிகள் மற்றும் வீடுகளுடன் கூடிய காணிகளை கொள்வனவு செய்து, அவற்றை பரிசாக கொடுத்தது போன்று யோஷித ராஜபக்சவின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.