பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறுகின்றன

340 0

downloadபண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள், தடையின்றி இடம்பெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க சர்வசே விமான நிலையத்தின் ஓடுபாதையில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமையினால் விசேட போக்குவர்த்து நடைமுறை கடந்த 3 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதன்படி விமான நிலையத்துக்கு வருகை தரும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் விதமாக காலை 8.30 தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை விசேட போக்குவரத்து நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விமான ஓடுபாதையின் நவீனமயப்படுத்தல் நடவடிக்கைகள் 06ஆம் திகதி ஆரம்பிக்கபட்டதுடன், இதன் பணிகள், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், விமான நிலையத்தின் செயற்பாடுகள் தடையின்றி இடம்பெறுவதாகவும் பயணிகள் அவசரமின்றி தமது பயணங்களை மேற்கொள்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.