ஹொரவப்பொத்தான பகுதியில் புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

287 0

26-trico-09-01-2017-2திருகோணமலை-ஹொரவப்பொத்தான பிரதான வீதியோரத்தில் கட்டப்பட்டிருந்த புத்தர் சிலைகள் மூன்று, இனந்தெரியாதவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வில்கம் விஹாரை-மொறவெவ மற்றும் திரியாய் சந்தியிலுள்ள புத்தர் சிலைகளே, இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளன.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மொறவெவ நகரத்திலிருந்த புத்தர் சிலையை உடைத்துச் செல்லும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சீசீடிவி கமராவில் பதிவாகியுள்ளன எனினும், மோட்டார் சைக்கிளின் இலக்கமோ அல்லது உடைப்பவர்களையோ இனங்கான முடியாத நிலையில் அந்தக் காட்சி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொறவெவ பிரதேசத்தில் மூவின மக்களும் ஒற்றுமையாகவும் ஒரே சங்கங்களில் அங்கத்துவம் வகித்தும் நெருங்கிய உறவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் மூவின மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சிப்பதாகவும், மக்கள் குழப்பமடைய தேவையில்லையெனவும் மொறவெவ பிரதேச இளைஞர் கழகங்கள், வேண்டுகோள் விடுத்துள்ளன.