களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த தொலைபேசி விநியோக பிரதிநிதி ஒருவர், தனது கார் மற்றும் 44 இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைபேசிகள் மற்றும் 7 இலட்சம் ரூபாய் பணம் என்பவற்றுடன் கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்திச் செல்லப்பட்டர் கொலன்னாவை பிரதேசத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்.குறித்த நபர் களுத்துறைக்குச் சென்ற நிலையில், நான்கு பேர் அடங்கிய குழுவினரால கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரிடமிருந்த பணம், கையடக்க தொலைபேசிகள் மற்றும் கார் என்பவற்றை கடத்தல் காரர்கள் எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகநபர்களை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.