ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது கனவு மாத்திரமே – ஜனாதிபதி

282 0

6516ஆட்சியை கவிழ்த்து விடலாம் என கனவு கண்டு கொண்டிக்கும் எவருக்கும் அது நடக்காது என்பதை நான் தீர்மானமாக தெரிவித்துக் கொள்கின்றேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி பதவி ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பண்டாரநாயக்க மண்டபத்தில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனக் கூறினார்.

மேலும் அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் போது,

ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணிக்கொண்டிருப்பது வெறும் கனவு மாத்திரமே அது ஒரு போதும் நிறைவேறப்போவதில்லை.ஹம்பாந்தோட்டையை பிரச்சினையாக்கி கூச்சல் போடுகின்றார்கள், அபிவிருத்தி பற்றிய சிந்தனையுடன் முன்னோக்கி அடியெடுத்து வைக்கும் போது அதனை அரசியல் பிரச்சினையாக மாற்றி விடுகின்றார்கள்.

4 ஆண்டுகளுக்குப் பிறது நடக்கப்போகும் தேர்தல் பற்றி இப்போது பேசுகின்றார்கள் எவருக்கும் என்னோடு இணைந்து ஆட்சி நடத்த வேண்டிய அவசியம் இல்லை.இவர்கள் கூறுவதைப்பேல நாட்டை விற்கவோ காட்டிக்கொடுக்கவோ இல்லை என்ற முக்கி செய்தியினையும் இங்கு நான் தெளிவாகக் கூறிக்கொள்கின்றேன்.

மேலும் ஆட்சியை கவிழ்ப்பேன் எனக் கூறிக்கொள்ளும் அனைவருக்கும் நான் தெரிவிப்பது என்னவெனில் இப்போது இருக்கும் ஆட்சியுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு செயற்படுங்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை குறித்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றும் போது,

அப்போது இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் வித்தியாசத்தை பாருங்கள் எவ்வளவு சுதந்திரம் காணப்படுகின்றது.ஜனாதிபதிக்கு எவ்வளவு திட்ட முடியுமோ அவ்வளவு திட்ட முடிகின்றது இது சுதந்திரமே. நாடு முழுவதும் ஜனாதிபதியைத் திட்டி சுவரொட்டிகளை ஒட்டுகின்றார்கள் இதனால் அச்சகங்களுக்கு பெரிய இலாபங்கள் கிடைத்துள்ளன.

இப்படி செய்து கொண்டு வருவதால் ஜனாதிபதிக்கோ ஆட்சிக்கோ எந்தவிதமான கெடுதலும் நிகழப்போவதில்லை.

இதன்காரணமாக எமது பயணம் எந்த வகையிலும் தடைப்படப்போவதும் இல்லை. தொடர்ந்து நாம் முன்னோக்கி செல்லுவோம் என்பது நிச்சயம் நாட்டை குழப்புவதற்காகவும் அபிவிருத்திகளை தடுப்பதற்கும் இவர்கள் செய்து வரும் செயல் நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகமே அந்த வகையில் அவர்கள் துரோகிகளே எனவும் பிரதமர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.