இன்று எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கை கையளிப்பு

302 0

imagesஉள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய குழுவின் அறிக்­கையில் பல்­வேறு குறை­பா­டுகள் இருப்­ப­தாகதெரி­ய­வ­ரு­கின்­ற நிலையில் இன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கட்சி தலை­வர்­க­ளி­டமும் எல்லை நிர்­ணய அறிக்கை கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பிர­தமர் அலு­வ­லக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.இதன்­படி கட்சி தலை­வர்­க­ளினால் இன்­றைய தினம் அறிக்கை தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்கை அண்­மையில் மாகாண மற்றும்உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­விற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது. எனினும் சுதந்­திரக் கட்சி மற்றும் ஐக்­கிய தேசியக் கட்­சியை சார்ந்த பிர­தி­நி­திகள் கையொப்பம் இட­வில்லை என்­ப­தற்­கான அறிக்­கையை அமைச்சர் நிரா­க­ரித்தார்.இதனை தொடர்ந்து எல்லை நிர்­ணய அறிக்­கையை எதிர்­வரும் 9 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் வைத்து தனக்குகைய­ளிக்­கு­மாறும் அதனை கட்சி தலை­வர்­க­ளிடம் முன்­வைத்து இறுதி தீர்­மானம் எடுக்­கப்­போ­வ­தாக பிர­தமர் ரணில்விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தி­ருந்தார். இதற்­கானஅறிக்­கையை பிர­தமர் அலு­வ­லகம் ஏற்­க­னவே ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிட்­டி­ருந்­தது.

அத்­துடன் அண்­மையில் அறிக்­கையில் கைச்­சாத்­தி­டப்­ப­டாத சுதந்­திரக் கட்­சியை சேர்ந்த அங்­கத்­தவர் மெத்யூ கைச்­சாத்­திட்­டி­ருந்தார். எனினும் இது­வரை ஐக்­கிய தேசியக் கட்சி அங்­கத்­தவர் மிஸ்பா கைச்­சாத்­தி­ட­வில்லை.இது தொடர்பில் கடந்த வாரம் அலரி மாளி­கையில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போது பிர­த­ம­ரிடம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.இதன்­போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறிப்­பி­டு­கையில், எல்லை நிர்­ணய ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் பல்­வேறு குறை­பா­டுகள் நில­வு­வ­தாக ஆணைக்­கு­ழுவின் தலைவர் அசோக பீரிஸ் தன்­னிடம் தெரி­வித்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்தார். இதன் கார­ண­மா­கவே ஐக்­கிய தேசியக் கட்சி இது­வரை கைச்­சாத்­தி­ட­வில்லை என குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதன்­படி கட்சித் தலை­வர்­களே இறுதி தீர்­மானம் எடுக்க வேண்டும் என தெரி­வித்­தி­ருந்தார்.இந்­நி­லையில் இன்­றைய தினம் பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் வைத்து எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடவும் கட்சி தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.