யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் உடல் அவயங்களை இழந்த இராணுவத்தினரின் குடும்பங்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த திட்டமானது இன்று பொலன்னறுவையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இராணுவ சேவை அதிகாரசபையின் நலன்புரி பிரிவு மற்றும் பொலனறுவை சுகாதார சேவை பிரிவும் இணைந்து இந்தத் திட்டத்தினை முன்னெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது வைத்திய சேவையொன்று இடம்பெற உள்ளதாகவும், இதில் ஆய்வுகூட பரிசோதனை, இரத்தப்பரிசோதனை உள்ளிட்ட சில பரிசோதனைகளும் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.