ஜி.எஸ்.பி.பிலஸ் கிடைத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படும்

285 0

131029552tthiga-fullஜி.எஸ்.பி. பிலஸ் வரிச்சலுகை கிடத்தவுடன் மலையகத்தில் கைதொழில் பேட்டைகள் அமைக்கப்படுமென மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திறிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் முலமாக பசும் பொன் வேலைதிட்டத்தின் கீழ் வீடுகள் கையளிக்கப்பட்டன.

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டமக்களுக்கு புதிதாக நிர்மானிக்கபட்ட வீடுகளை 20 வீடுகளை கையளிக்கும் நிகழ்வின் போதே இதனை தெரிவித்தார்

மேலும் உறையாற்றிய அமைச்சர் இன்று சிலர் ஆட்சிமாற்றம் ஏற்பட போவதாக கூறிவருகிறார்கள்.

ஆனால் 2020ம் ஆண்டு வரை ஆட்சிமாற்றம் இடம்பெறாது இதனை நாட்டின் ஜனாதிபதியும், சபாநாயகரால் மாத்திரமே முடிவு செய்ய முடியுமென தெரிவித்தார்.

ஆனால் சிலர் ஆட்சி மாற்றம் வந்தால் அமைச்சர் திகாம்பரத்தை இல்லாதொழிக்க கங்கனம் கட்டி கொண்டு இருக்கின்றனர் ஏன் என்றால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நினைத்தால் மாத்திரம் எதனையும் செய்ய முடியுமென நினைத்தார்கள் ஆனால் இப்போது திகாம்பரம் நினைத்தால் மாத்திரம்தான் மலையகத்தில் எதனையும் செய்யமுடியுமென அவர் தெரிவித்தார்.

இதேவேளை மலையகத்தில் நாங்கள் பாரிய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். ஹட்டன் நகரத்தில் 200 வருடகால பழைமை வாய்ந்த தகரங்களை கொண்டு அமைக்கப்பட்ட கூடாரங்களை அகற்றி வீதிகளை பெரிதாக்கி பாரிய கடைதொகுதிகளை அமைத்து 2020ம் ஆண்டு ஹட்டன் நகரத்தை ஒரு நவின நகரமாக அமைக்கபோகின்றோம்.

இதனையெல்லாம் சகித்து கொள்ள முடியாதவர்கள் ஜனாதிபதியொடு கலந்துரையாடி டயகம பகுதியை அபிவிருத்தி செய்யபோவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதியின் பிரதிநிதியும் பிரதமருடைய பிரதிநிதியும் நானே ஆகையால் டயகம பகுதிக்கும் அபிவிருத்தி செய்யபோவதும் நான்தான்.

இனிவரும் காலபகுதியில் என்னை மீறி எவருக்கும் குறித்த பகுதியில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியாது.

ஏன் என்றால் 2008ம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்பு அரசியல் பலத்தை வைத்து கொண்டு நாங்கள் முன்னெடுக்கும் வேலைதிட்டங்களை மேற்கொள்ளும் போது குண்டர்களை வைத்து எங்களை தாக்குவதற்கு முயற்சி செய்வார்கள்.

நாங்கள் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் அல்ல பதுளை, மாத்தறை இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலும் வாழும் மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுத்து வருகின்றோம்.

மலைகத்தில் இன்று மாற்றமும் அபிவிருத்தியும் வந்திருக்கிறது.

அமைச்சர் மனோகணேசன், இராதகிருஸ்னண் ஆகியோரோடு இணைந்து ஒற்றுமையாக செயல்படுகின்றமையால் தான் மலையகத்தில் இன்று மாற்றம் வந்துள்ளதாக அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.