நாட்டின் இயற்கை அமைப்புகளின் மீது முதலீட்டு வாய்ப்புகளை பெற்று இளம் சந்ததிக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக நீர்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற பின்தங்கிய பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள விமான நிலையம் என்பவற்றை பயன்படுத்தி முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தற்போதைய அரசாங்கம் பாரிய வேலைத்திட்டத்தை முன்னெடுத்துவருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதேபோன்று அந்த விவகாரம் இலகுவானதல்ல. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில், பாரிய கடன் பளுவுடன் பொதுமக்களின் நலன்புரி விடயங்களுடம் நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவை இருப்பதாகவும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.
இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் விசேட செயற்றிட்டம் மற்றும் திறனபிவிருத்தி உடனான தொழில்துறையினரை ஏற்படுத்துதல் உள்ளிட்ட வேலைத்திட்டங்கள் சீன அரசாங்கத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வௌியிட்டார்.