தமிழக விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வைகோ கூறினார்.
சென்னையில இருந்து விமானம் மூலம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரை வந்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், உயிர் இழந்த விவசாயிகளுக்கும் மத்திய-மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும். நகர வங்கிகளில் அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.
காலில் விழும் கலாச்சாரம் குறித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருப்பது, காலம் கடந்த பேச்சாக உள்ளது. அது அவருக்கு தாமதமாக வந்த ஞானோதயம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.