அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் மீண்டும் எச்சரிக்கை

259 0

12524328_10208642890290828_4776006924399522213_nதமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாதபட்சத்தில் மீண்டும் ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அதிஷ்ட இலாப சீட்டு விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிஷ்ட லாபச் சீட்டுக்களின் விலை 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டமை மற்றும் அதிஷ்டலாபச் சீட்டு விற்பனையாளர்களின் தரகு இலாபம் அதிகரிக்கப்படாமை ஆகிய காரணங்களுக்காக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஏற்கனவே குறித்த பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு அதிஷ்ட லாப சீட்டு விற்பனையாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து குறித்த தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களுக்கு அமைய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படாத நிலையில் மீண்டும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பீ எஸ் எஸ் மதரசிங்க தெரிவித்தார்.