ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஏகமனதாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி அமைச்சர்களின் வாராந்த சந்திப்பின் போது, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இந்த தீர்மானம் குறித்து ஜனாதிபதி எந்த கருத்தையும் வெளியிடவில்லை எனவும் சரத் அமுனுகம குறிப்பிட்டார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியோற்ற வேளையில் தாம் இரண்டாவது தடைiவாயாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை என்ற தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.