இந்த ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய முதலாவது அமர்வில் அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து விவாதிக்கப்படவிருந்தது.
எனினும் அரசியல் அமைப்பு சபை, அதனை கலவரையரையின்றி பிற்போட தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பான விவாதம் இன்று இடம்பெறாது.
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் குறித்து விவாதங்கள் இன்றும், நாளையும், நாளை மறுதினமும் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட விருந்தது.
இந்தநிலையில் இன்று காலை 9.30 க்கு கூடும் நாடாளுமன்றம் எதிர்வரும் 24ஆம் திகதி மீண்டும் கூடும் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.