லசந்த கொலை – அடுத்துவரும் அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி -அமைச்சர் ரவி கருணாநாயக்க

269 0

thumb_large_adada1ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளின் நிலை குறித்து அடுத்துவரும் அமைச்சரவை கூட்டத்தில் கேள்வி எழுப்பவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கவின் நினைவு நிகழ்வு நேற்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என ரவி கருணாநாயக்க இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அமைச்சர் என்ற வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தாம் வெட்கமடைவதாக மனோ கணேசன் இதன்போது குறிப்பிட்டார்.