நல்லாட்சி அரசாங்கத்தின் உண்மையான தன்மை வெளிப்படுள்ளது – ஜே வி பி

255 0

vijitha_herathநல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவுடன் அரசாங்கத்தின் உண்மையான தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜே வி பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜே வி பியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் இதனை குறிப்பிட்டார்.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற ஒடுக்கு முறை மைத்திரி ரணில் ஆட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

ஹம்பந்தோட்டை பிரதேசத்தில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொது மக்களின் காணிகளை கொள்ளையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது.