தான்சானியா நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டிற்கு கூடுதலாக ரூ.50 கோடி டாலர் கடன் அளிக்க இந்தியா விருப்புவதாக தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்டமாக தான்சானியா நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அதிபர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா-தான்சானியா நாடுகளுக்கிடையிலான நட்புறவை பலப்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் அதிபர் போம்பே ஜோசப் மகுபுலியுடன் மோடி ஆலோசனை நடத்தினர்.
அப்போது, இருநாடுகளுக்கு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகினர். பின்னர் பிரதமர் மோடி, அதிபர் போம்பே ஜோசப் மகுபுலியுடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது மோடி பேசியதாவது:-கிழக்கு கடற்கரை ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தான்சனியா ஆகிய நாடுகள் இந்தியாவுடன் வலிமையான உறவு கொண்டுள்ளன. இந்தியாவை முன்னேற்றுவதற்காக என்னிடம் உள்ள யோசனைகள் போன்றே அதிபர் மகுபுலிக்கும் உள்ளது. ஒட்டுமொத்தமாக இருநாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவு ஆரோக்கியமாகவும், வளர்ந்தும் வருகிறது.
17 நகரங்களில் நீர் திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். தான்சானியா நாட்டிற்கு கூடுதலாக அந்நாடு அதிபருடன் ரூ.50 கோடி டாலர் கடன் அளிக்க இந்தியா விருப்புகிறது.
அதிபர் மகுபுலியை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன். எங்களது ஒப்பந்தத்தில் பொதுமக்கள் சுகாதாரம் மற்றுமொரு முக்கியமான விஷயமாகும். இவ்வாறு அவர் பேசினார்.