நுவரெலியா ஹட்டன் ஹோல்புறுக் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் இன்று காலை திறந்து வைத்தார்.
ஹோல்புறுக் நகரில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்திற்கு செல்லும் பிரதான வீதி குன்றும் குழியுமாக காணப்பட்ட நிலையில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் குறித்த வீதி புனரமைக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து அவ்வீதி மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேலினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதன்பின்னர் ஆலய பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன.
இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, முன்னாள் மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, முன்னாள் நுவரெலியா மாவட்ட பிரதேச சபை பிரதி தலைவர் எம்.சச்சிதானந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.