கொட்டகலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டன (காணொளி)

285 0

hation-homeநுவரெலியா கொட்டகலையில் பசும்பொன் வீடமைத்திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்று 2ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மூலமாக “பசும் பொன்” வீடமைப்பு திட்டத்தின் கீழ், நுவரெலியா கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் தோட்டத்தில் வீடுகள் அமைக்கப்பட்டு வந்தன.

இதற்கமைய புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 20 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு, அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் புத்திரசிகாமணி, மலையக மக்கள் முன்னணி செயலாளர் ஏ.லோறன்ஸ் என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையைத் திரை நீக்கம் செய்து வைத்ததோடு, வீடுகளை திறந்து வைத்தனர்.