ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
நேற்று மாலை இலங்கை விஜயம் செய்துள்ள சந்திரபாபு நாயுடு, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் நிர்வாகத்தின் கீழ் ஆந்திர பிரதேசத்தில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புக்கள் போன்றனவற்றில் அடைந்துள்ள அபிவிருத்தி குறித்து ஆந்திர முதல்வருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் ஆந்திர மாநிலத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.