சிறீலங்காவின் அடுத்த ஆட்சியாளர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில வார இதழொன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
தான் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரல்லவெனவும், அதேபோல் புதிதாக உருவாக்கப்பட்ட கட்சியின் அங்கத்தவருமில்லையெனத் தெரிவித்தார்.
அத்துடன் புதிதாக உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியில் தன்னை இணைந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
அரசியலில் இறங்கவுள்ளதாக வெளியாகும் ஊகங்கள் பற்றிய கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், இதுபற்றி தாம் எந்த முடிவையும் இன்னமும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவீர்களா எனக் கேள்வியெழுப்பியபோது, அதை மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.