டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

152 0

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பிற்கு காரணம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ ஆலோசகரான வைத்தியர். ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாடு கொரோனாவுடன் போராடுவதால், மக்கள் டெங்குவிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல, டெங்கு தொடர்பிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களில் டெங்கு பரவாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நுளம்பு இனப்பெருக்கம் செய்யக்கூடிய இடங்கள், உட்புறம் மற்றும் வெளிப்புறங்களை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பொது இடங்களின் தூய்மையில் கவனம் செலுத்துமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.

கொவிட் -19 தொற்றால் பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால், பாடசாலைகளில் தூய்மையை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

ஒருவருக்கு இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால், அரச மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் அல்லது ஒரு தனியார் மருத்துவரை அணுக வேண்டும்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் உள்ள நோயாளிகள் விரைவில் முழு இரத்த எண்ணிக்கை பரிசோதனையை பெற வேண்டும். அத்துடன் பாராசிட்டமால் தவிர வேறு எந்த மருந்துகளையும் எடுக்க வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.