15 நாட்களுக்குள் வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை: மதுரை மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் எச்சரிக்கை

149 0

மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி பாக்கியை 15 நாட் களில் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில்வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் மற்றும் திடக் கழிவு மேலாண்மைக் கட்டணம் உள்ளிட்டவை முக்கிய வருவாய் இனங்களாகும். கடந்த 3 ஆண்டு களாக மாநகராட்சி வரி வசூலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் உள்ளாட்சித்தேர்தல் நடந்ததால் ஆளும்கட்சியாக இருந்த அதி முகவினர், பொதுமக்கள், நிறு வனங்களைக் கட்டாயப்படுத்தி வரி வசூலிக்கக் கூடாது என்று வாய்மொழியாக உத்தரவிட்டனர். அதனால், கெடுபிடியாக வரி வசூலிக்கவில்லை. அதற்குள் கரோனா தொற்று வந்ததால் ஒட்டுமொத்தமாக வரி வசூலை மாநகராட்சி நிறுத்தியது.

தாமாக முன் வந்து வரி செலுத்துவோரிடம் மட்டுமே வரியைப் பெற்று வந்தது.

இந்நிலையில், மதுரை மாநக ராட்சி எப்போதும் இல்லாத அளவுக்கு நிதி நெருக்கடியில் தவிக்கிறது. பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக்கூட திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி தேர்தல் நடத்தப் படாததால் மத்திய அரசிடம் இருந்து வரும் மானிய நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால், மாநகராட்சி வரி வசூலைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி ஆணையர் கா.ப. கார்த்திகேயன் கூறியதாவது:

2021-22 நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி, காலிமனை வரி, பாதாள சாக்கடை கட்டணம், குடிநீர் கட்டணம் உள்ளிட்ட கட் டணங்கள் செலுத்துவதற்கான காலக்கெடு செப். 30-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதுவரை கட் டாமல் சுமார் ரூ.22.49 கோடி வரி பாக்கி உள்ளது.

வரி செலுத்தாதோர் இனியும் தாமதம் செய்யாமல் வரியைச் செலுத்தி மாநகராட்சிக்கு ஒத்து ழைப்பு வழங்க வேண்டும். இன்னும் 15 நாட்களில் வரி செலுத்தாத பொதுமக்கள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.