கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் முடிவு- உலக சுகாதார அமைப்பு

163 0

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பம் செய்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம், தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய கோவேக்சின் தடுப்பூசிக்கு இதுவரை உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. பன்னாட்டு பயணங்களுக்கு அனுமதிக்கப்படும் தடுப்பூசி பட்டியலிலும் கோவேக்சின் இடம் பெறவில்லை.
கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கோரி உலக சுகாதார நிறுவனத்திடம் பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதற்கிடையே, கோவேக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் குறித்து அக்டோபர் 6ம் தேதி முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவேக்சின் தடுப்பூசிக்கான அங்கீகாரம் குறித்து அடுத்த வாரம் நடைபெற உள்ள கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனஉலக சுகாதார நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.