பலஸ்தீனுடனான நட்புறவுக் கொள்கையில் எந்தவகையிலும் மாற்றமில்லை-GL

157 0

பலஸ்தீனும் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நட்புறவுக்கொள்கை எந்தவகையிலும் மாற்றத்திற்கு உட்படுத்தப்படவில்லை என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் நேற்றைய தினம் (05) பாராளுமன்றத்தில் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

சர்வதேச ரீதியில் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புகளை மேம்படுத்தி உறவுகளை வலுவூட்டுவது அரசாங்கத்தின் இலக்காகும்.

மஹிந்த ராஜபக்ஷவின் பெயரில் பலஸ்தீன வீதி பெயரிடப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், இலங்கையில் பலஸ்தீனத்தின் உயர்ஸ்தானிகராலயம் அமைக்கப்பட்டுள்ளமை இதன் வழியிலேயே யாகும் என்றும் கூறினார்.

அரச நிறுவனங்களில் இடம் பெறும் மோசடிகள் பற்றி துரிதமாக விசாரிப்பது அவசியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.