உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயற்பாடு – இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்

177 0

அதிபர், ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளத்தினை பெறுமாறு கிழக்கு மாகாண பிரதம செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபமானது உயர்நீதிமன்றத்தினை அவமதிக்கும் செயற்பாடாகவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமான பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றில் குறித்த சம்பள பெறுகைக்கு எதிராக வழக்கு ஒன்று தாக்கல்செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விண்ணப்பங்களைப் பாடசாலைகளுக்கு வழங்கியுள்ள செயற்பாடானது மிகவும் கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணம் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கிய நிலைக்குச் சென்றுள்ளது.கடந்த வருடம் 07வது நிலையிலிருந்து 08வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ள நிலையிலும் பெரும்பாலான கல்வி வலயங்கள் மிகமோசமான பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுள்ள நிலையிலும் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரோ,பிரதம செயலாளரோ,கல்விச்செயலாளரோ எந்தவித கருத்தினையும் தெரிவிக்காத நிலையே இருந்து வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.