காபூலில் சீக்கிய குருத்வாரா சேதம்; மக்கள் சிறைபிடிப்பு

186 0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கார்தே பர்வான்  குருத்வாராவை தலிபான்கள் சேதப்படுத்தியதோடு அங்குள்ள நபர்களையும் சிறைபிடித்து வைத்துள்ளனர்.

இது குறித்து இந்தியா வேர்ல்டு ஃபோரம் இயக்குநர் புனீத் சிங் சண்டோக் அளித்துள்ள பேட்டியில், காபூலில் இருந்து வருந்தத்தக்க செய்திகள் வந்துள்ளன. பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தலிபான்கள் கார்தே பர்வா குருத்வாராவைக் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் அங்கிருந்த மக்களையும் சிறைபிடித்து வைத்துள்ளனர். மேலும் குருத்வாராவில் இருந்த சிசிடிவி கேமராக்களை தலிபான்கள் அடித்து நொறுக்கிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன என்றார்.

இப்போது உள்ளூர் குருத்வாரா நிர்வாகிகள் அங்கு விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கார்தே பர்வான் குருத்வார் ஆப்கானிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பதவியேற்ற பின்னர் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்னர் அம்மாதம் 30 ஆம் தேதியற்று 17 வயது சிறுமி உட்பட ஹசாராஸ் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையில் இடம்பெற்றிருந்து தலிபான்களிடம் சரணடைந்தவர்களாவர்.