சிரியாவின் அலெப்போ மாநிலத்துக்கு உட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 50-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
சிரியா மற்றும் துருக்கி நாடுகளுக்கு இடையில் உள்ள அலெப்போ மாநிலத்தின் பல பகுதிகளை சிரியாவை சேர்ந்த போராளி குழுக்கள் கைப்பற்றி வைத்துள்ளன. அப்பகுதிகளை மீட்பதற்காக துருக்கி விமானப்படையின் உதவியுடன் சிரியா படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், சிரியாவின் அலெப்போ மாநிலத்துக்கு உட்பட்ட அஜாஸ் நகரில் தீவிரவாதிகள் நடத்திய டேங்கர் குண்டு தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.
துருக்கி எல்லைப் பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அஜாஸ் நகர நீதிமன்றம் அருகில் நேற்று சக்திவாய்ந்த டேங்கர் லாரி குண்டு வெடித்து சிதறியதில் 48 பேர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி, அடுத்தடுத்து உயிரிழந்ததால் இந்த தாக்குதலின் பலி எண்ணிக்கை ஐம்பதை கடந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இறந்தவர்களின் பிரேதங்கள் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு எரிந்து உருக்குலைந்து, கரிக்கட்டைகளாக காணப்படுவதாகவும் அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.