பாரிய வெள்ளைப்பூடு மோசடி நடந்ததாக அமைச்சர் பந்துல பாராளுமன்றில் ஒப்புக்கொண்டார்

160 0

சதொச நிறுவனத்தில் பாரியளவில் வெள்ளைப்பூடு ஊழல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் உண்மையாக ஏற்றுக்கொள்கிறது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தில் இவ்வாறான மோசடி நடந்தது குறித்து அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் துறைமுகத்திலிருந்து கொண்டுவரப்பட்டு சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட வெள்ளைப்பூடு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ வெள்ளைப்பூடை 350 ரூபா பெறுமதிக்கு சதொச மொத்த நிறுவனத்துக்கு விநியோகிக்கும் போது குறித்த வெள்ளைப்பூடை தனியாருக்கு 130 ரூபாவுக்கு விநியோகம் செய்தமை குறித்து அரசாங்கம் கூற வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

சதொச நிறுவனத்தில் பாரியளவில் வெள்ளைப்பூடு ஊழல் மோசடி ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் உண்மையாக ஏற்றுக்கொள்கிறது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதில் வழங்கியுள்ளார்.
தற்போது வெள்ளைப்பூடு மோசடி தொடர்பாக வெளிவந்த தகவல் தொடர்பான அனைத்து உண்மைகளையும் குற்றத்தடுப்பு பிரிவினர் ஆராய்ந்து செய்து வருவதாகவும், இந்த மோசடி குறித்து நாளை பாராளுமன்றத்தில் அறிக்கை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஊழல் மோசடி முதல் மற்றும் கடைசியுமான சந்தர்ப்பம் இது இல்லை. இதற்கு முன்னரும் இவ்வாறான ஊழல்கள் இடம்பெற்றள்ள தாகவும் சுட்டிக்காட்டிய அவர், கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் சதொசவில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பிலான 06 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டாா்.