இசைமேதை அமரதேவ பெயரில் சங்கீத கல்லூரி அமைக்க நடவடிக்கை

288 0

d0ccc994e0aab174eab816819fb22dd1_xl-720x450எதிர்கால பரம்பரைக்காக சங்கீத கல்லூரியை ஆரம்பிக்குமாறு அமரர் இசைமேதை கலாநிதி அமரதேவ மறைவதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய சங்கீத கல்லூரியை நிர்மாணிப்பது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தலைமையில்  ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

அமரர் இசைமேதை அமரதேவ அவர்களுக்காக மேற்கொள்ளும் நன்றிக்கடனாக அவரது மூன்றாவது மாத  நிகழ்வுக்கு முன்னதாக இது தொடர்பான செயற்பாடுகளை ஆரம்பிப்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

உத்தேச அமரதேவ சங்கீத கல்லூரி அழகியல் பெறுமானங்களுடைய ‘அப்பே கம’ சுற்றாடலில் நிறுவக்கூடிய சாத்தியங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்காக விசேட குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அக் குழு எதிர்வரும் 10 ஆம் திகதி குறித்த நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்த்தபின்னர் 30 ஆம் திகதி மீண்டும் அது தொடர்பில் கலந்துரையாடவுள்ளது.

இந்த சந்திப்பில் அமைச்சர்களான எஸ்.பீ.நாவின்ன, கயந்த கருணாதிலக்க, பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, கலாச்சார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் அனுஷா கோகில, உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.