எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள் இடம் பெற்று வருகின்றது-உதய கம்மன்பில

155 0

எந்தவித அடிப்படையும் இன்றி நாட்டின் எண்ணெய் குதங்கள் தொடர்பில் வதந்திகள் இடம்பெற்றுவருவதாக அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதான நாடாளுமன்றத்தில் நேற்று (04) கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும் தமக்குமிடையில் எந்த சந்திப்பும் இடம்பெறவில்லை என்றும் கூறினார்.

எண்ணெய் குதங்கள் பற்றி அநாவசிய அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலோபாய ரீதியில் எண்ணெய் குதங்களை பாதுகாப்பது அவசியமாகும். வட மாகாணத்தின் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் இரண்டு களஞ்சியங்களை அமைப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். யுத்த காலப்பகுதியில் ஏ-9 வீதி மூடப்பட்டமையினால் எண்ணை களஞ்சியங்களை காங்கேசன் துறைக்கு எடுத்துச்செல்ல நேர்ந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உயிரியல் திரவ உரத்தை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாய நிலங்கைளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மிளகாய் மற்றும் வெங்காயத்தின் இறக்குமதியை எதிர்காலத்தில் நிறுத்தவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கூறினார்.