யாழ். மாவட்ட பெற்றோர்களின் கவனத்துக்கு….தொலைபேசி மூலம் அறியத்தரப்படும்

265 0

கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்டத்தில், விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதினருக்கான பைஸர் கோவிட்-19 தடுப்பூசியானது, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

யாழ். மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலையிலும் பருத்தித்துறை, ஊர்காவற்றுறை, தெல்லிப்பளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், இத்தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்தடுப்பூசி வழங்கலை மக்களுக்கு மேலும் இலகுபடுத்துவதற்காகவும் வைத்தியசாலையில் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும், விசேட தேவை மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ள 12 தொடக்கம் 19 வயதுடையவர்களின் பெற்றோர் ஃ பாதுகாவலர் தாம் தடுப்பூசியை பெறவிரும்பும் வைத்தியசாலைக்கு, கீழ்தரப்படும் தொலைபேசி இலக்கத்முக்கு அழைப்பை மேற்கொண்டு, முற்கூட்டியே தமது பிள்ளைகளின் பெயர் விவரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

அவ்வாறு பதிவுசெய்தவர்களுக்கு, தடுப்பூசி வழங்கப்படும் தினம் மற்றும் நேரமானது வைத்தியசாலையால் தொலைபேசி மூலம் அறியத்தரப்படும். அத்தினத்தில் தவறாது சென்று தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவும்.

யாழ். போதனா வைத்தியசாலை        – 0770741385
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை  – 0761275210
ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை – 0772073098
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை  – 0771340519
சாவகச்சேரி  ஆதார வைத்தியசாலை   – 0702900000