அம்பாந்தோட்டையை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எதிராக அணிதிரள வேண்டும்

279 0

mahinda-medamulan-380-seithy-720x480-720x450சுத்தமான அம்பாந்தோட்டை பூமியை அசுத்தப்படுத்திய இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக ஒரு புதிய சக்தியாக ஒன்றிணையுமாறு சகலருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

அம்பாந்தோட்டையில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னர் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர், மக்கள் விடுதலை முன்னணியினர் ஆகியோருக்கு ஆட்சி செய்ய நாடு இருக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் ஈடுபட வடக்கு இருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் அரசியலில் ஈடுபட நாடு இருக்க வேண்டும். இதற்காகவே நாங்கள் போராடி வருகின்றோம்.

எமக்கு கிடைக்கும் விருப்பு வாக்குகளுக்காக அம்பாந்தோட்டைக்கு வந்து, கண்ணீர் புகைக்குண்டு, கல், தண்ணீர் தாரை தாக்குதல்களை எதிர்கொண்டு எமது நேரத்தை செலவிடவில்லை. இது நாட்டின் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.