மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடையவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

130 0

மன்னார் மாவட்டத்தில் விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பைஸர்  தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (திங்கட்கிழமை)  காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார துறையினர் இராணுவம் மற்றும் விமானப்படை ஆகியோரின் ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது முதல் நாளான இன்று (திங்கட்கிழமை) விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்த 12 வயது தொடக்கம் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது பலர் பெற்றோருடன் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை பெற்றுக்கொண்டனர்.

விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்தவர்கள் வைத்தியர்களின் விசேட ஆலோசனையை பெற்று பின்னர் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

12 வயது தொடக்கம் 19 வயதிற்கு உட்பட்ட விசேட தேவையுடைய மற்றும் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று உள்ளவர்களுக்கு நாளை  மற்றும் நாளை மறுதினம் புதன் கிழமை   ஆகிய இரு தினங்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பைஸர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.