திருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்குகிறது

277 0

201701071728135107_tirupur-professor-murder-case-police-investigation_secvpfதிருப்பூர் பேராசிரியை கொலையில் செல்போன் மூலம் துப்பு துலங்கி வருவதால் போலீசார் 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே இருகூர் ஐ.ஓ.பி. காலனியை சேர்ந்தவர் சிவலிங்கம். இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (வயது 38). இவர் திருப்பூர் அரசு கலை கல்லூரியில் உதவி பேராசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சத்திய பிரபு (4) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக சிவலிங்கம், லதா ஆகியோர் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.இதனால் அதே பகுதியில் வசித்து வரும் தனது தாயிடம் மகனை விட்டு விட்டு திருப்பூருக்கு லதா வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் லதா எரித்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.இதுபற்றி தகவல் கிடைத்ததும் கோவை மாநகர துணை கமி‌ஷனர் லட்சுமி, உதவி கமி‌ஷனர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் சென்று லதா உடலை கைப்பற்றிவிசாரணை நடத்தினர்.

இதில் லதாவின் கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையும் கொள்ளை போய் இருந்தது.ஆனால் லதா காதில் இருந்த கம்மல், மற்றும் பீரோவில் இருந்த நகை- பணம் திருட்டு போகவில்லை.

லதா உடல் அருகிலும், வீட்டிலும் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.பேராசிரியை லதா எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொன்ற கொலையாளிகள் யார்? என்று விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.பேராசிரியை லதா, வழக்கமாக இரவு 8 மணியளவில் தான் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்புவார். தனியாக வசித்து வந்ததால் அதன் பின்னர் வீட்டை பூட்டி விடுவார்.

வீட்டுக்கு தெரிந்த நபர்கள், உறவினர்கள் வந்தால் மட்டுமே கதவை திறப்பார் என கூறப்படுகிறது.
தற்போது லதாவின் வீடு உள்பக்கமாக திறந்துள்ளதால் லதாவுக்கு நன்கு அறிமுகமான நபர்களே வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.மேலும் லதா, கடந்த 2 மாதத்துக்கு முன்பு வங்கி கடன் மூலம் ரூ.30 லட்சத்துக்கு புதிய வீடு வாங்கியுள்ளார்.இதனால் அவரிடம் பழகியவர்கள் பணம் கேட்டு தொல்லை கொடுத்து இருக்கலாம். இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்து இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பேராசிரியை லதா 2 செல்போன்களை வைத்திருந்தார். தற்போது ஒரு செல்போன் மாயமாகி உள்ளது. இந்த செல்போனை கொலையாளி எடுத்து சென்றிருக்கலாம் என தெரிகிறது.மேலும் லதா கடைசியாக செல்போனில் யார்-யாரிடம் பேசி உள்ளார்? அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகள் குறித்தும் பட்டியல் தயாரித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

மேலும் கணவர் சிவலிங்கத்திடம் நேற்று தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.இதுபற்றி தனிப்படை அதிகாரிகள் கூறும் போது, “பேராசிரியை லதா கொலை வழக்கில் செல்போனில் வந்த அழைப்புகள் குறித்து விசாரித்து வருகிறோம். லதாவுக்கு தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் என இதுவரை 25-க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது சந்தேகம் வந்துள்ளது. விரைவில் கொலையாளியை பிடித்து விடுவோம்” என்றனர்.