பெருந்துறை அருகே பெட்டி பெட்டியாக 2 டன் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

337 0

201701072248483522_gelatin-sticks-seized-2-tons-of-boxes-near-perundurai_secvpfபெருந்துறை அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட 2 டன் ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெருந்துறை வழியாக லாரியில் வெடிமருந்து கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையொட்டி உஷார் அடைந்த இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.பெருந்துறை அருகே உள்ள வாவிக்கடை பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது அங்கு ரோட்டு ஓரத்தில் ஒரு லாலி நின்று கொண்டு இருந்தது.

போலீசார் அங்கு சென்று பார்த்த போது லாரி டிரைவா லாரியில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவரது பேச்சில் சந்தேகம் வரவே போலீசார் லாரியில் சோதனை நடத்தினர். அப்போது அந்த லாரியில் பெட்டி பெட்டியாக ஜெலட்டின் குச்சிகள் இருப்பது தெரியவந்தது. மற்றும் சாக்கு பைகளிலும் ஜெலட்டின் குச்சிகள் இருந்தன.

இந்த 60 அட்டை பெட்டிகளிலும், 10 சாக்கு மூட்டைகளிலும் 15 ஆயிரத்து 600 ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் என்று கூறப்படுகிறது.ஜெலட்டின் குச்சிகளையும், அதை கடத்தி வந்த லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் இருந்து கேரளாவுக்கு இந்த ஜெலட்டின் குச்சிகள் லாரியில் கடத்தப்படுவதாக விசாரணையில் தெரியவந்தது.பிடிபட்ட லாரி மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கியூ பிராஞ்ச் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து கியூ பிராஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த ஜெலட்டின் குச்சிகளை கடத்தியது யார்? எதற்காக இவைகள் கடத்தப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.