மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

126 0

இலங்கைக்கு மேலும் 304,000 பைஸர் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய, குறித்த தடுப்பூசிகள் இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட 40 இலட்சம் பைஸர் தடுப்பூசிகளின் முதலாம் தொகுதியே இவ்வாறு இன்று இலங்கை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.