குடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல்முறையாக ஓ. பன்னீர்செல்வம் கொடி ஏற்றுகிறார்

258 0

201701081012563313_first-time-panneerselvam-loads-national-flag-in-republic-day_secvpfகுடியரசு தினத்தில் கவர்னருக்கு பதில் முதல் முறையாக ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுகிறார்.

மாநிலங்களில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று முதல்-அமைச்சர்களும், ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர்களும் கொடியேற்றும் நடைமுறை இருந்து வருகிறது.சென்னையில் கோட்டை கொத்தளத்தில் முதல்- அமைச்சரும், கடற்கரை காமராஜர் சாலையில் காந்திசிலை அருகில் கவர்னரும் கொடியேற்றுவார்கள்.

இந்த ஆண்டு வருகிற 26-ந் தேதி குடியரசு தினத்தன்று கவர்னர் கொடியேற்ற மாட்டார் என்றும் அவருக்கு பதில் முதல்-அமைச்சர் கொடியேற்றுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்துக்கு தனியாக இன்னும் கவர்னர் நியமிக்கப்படவில்லை. மராட்டிய கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் தமிழக கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். அவர் வருகிற 26-ந் தேதி மராட்டிய கவர்னர் என்ற முறையில் மும்பையில் கொடியேற்ற இருப்பதால் சென்னையில் அன்றைய தினம் அவர் கொடியேற்றவில்லை.

எனவே வருகிற 26-ந் தேதி சென்னையில் கடற்கரை சாலையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கவர்னருக்கு பதில் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய கொடியேற்றி வைக்கிறார். இது தொடர்பாக தமிழக அரசுக்கு கவர்னர் மாளிகையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் கவர்னருக்கு பதில் முதல்-அமைச்சர் கொடியேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

1974-ம் ஆண்டு முதல் முறையாக குடியரசு தினத்தில் கவர்னர்கள் கொடியேற்றும் முறை கொண்டு வரப்பட்டது. அது முதல் கவர்னர்களே சென்னையில் கொடியேற்றி வருகிறார்கள். தற்போது தமிழகத்துக்கு தனியாக கவர்னர் நியமிக்கப்படாததால் முதல் முறையாக முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடியரசு தினத்தன்று கொடியேற்றுகிறார்.தமிழகத்தில் குடியரசு தினத்துன்று எந்த முதல்- அமைச்சரும் கொடியேற்றியது கிடையாது. முதல்- முறையாக அந்த வாய்ப்பு முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு கிடைத்துள்ளது.