வீட்டின் கழிவறைக்குள் சென்ற சிறிது நேரத்தில் உயிரிழந்த 6 வயது சிறுமி! நடந்தது என்ன?

176 0

சவுதி அரேபியாவில் வீட்டு கழிவறையில் கொடிய விரியன் வகை பாம்பு பதுங்கியிருப்பதை அறியாமல் சிறுமி சென்ற நிலையில் அது கடித்ததில் உயிரிழந்துள்ளார்.

அபா நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. தமரா அப்துல் ரகுமான் என்ற 6 வயது சிறுமி தனது வீட்டில் உள்ள கழிப்பறைக்கு நேற்று சென்றார்.

அப்போது அங்கிருந்த கொடிய விஷம் கொண்ட விரியன் வகை பாம்பு தமராவை கடித்தது. இதையடுத்து உயிருக்கு போராடிய சிறுமியை குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து குடும்பத்தார் கூறுகையில், எங்கள் வீட்டுக்குள் பாம்பு வந்தது என்பதை நினைத்தாலே பதறுகிறது.

சவுதி அரேபியாவில் பாலைவனம் மற்றும் மலைப் பகுதிகளில் பல பாம்புகள் உள்ளன, ஆனால் அவை நகரங்களில் குறைவாகவே காணப்படுகின்றன.

கொரோனா கட்டுபாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் சமீபத்தில் தான் மகிழ்ச்சியுடன் தமரா பள்ளிக்கூடத்துக்கு செல்ல துவங்கினாள்.

ஆனால் இப்போது நடந்த துயரத்தை என்னவென்று சொல்வது, இது அல்லாவின் விருப்பம். பாம்பு எங்கள் மகளுக்காக எங்கள் வீட்டில் குளியலறையில் பதுங்கிக் கொண்டிருந்தது, மற்றும் அவளின் வயது காரணமாக அது கடிக்கப்படும் வரை அது கழிப்பறையில் இருப்பதை அவள் கவனிக்கவில்லை என சோகத்துடன் கூறியுள்ளனர்.