இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை கட்டவிழ்த்து விடுவதை வழக்கமாக பாகிஸ்தான் கொண்டுள்ளது.
பயங்கரவாதிகளை வளர்த்து விட்ட பாகிஸ்தான், அதற்கே களப்பலியாகவும் ஆகி வருகிறது.
ஆனால் அங்கு பலுசிஸ்தான், கராச்சி, பழங்குடியினர் வாழ்கிற தன்னாட்சி பகுதிகளில் நடக்கிற பயங்கரவாத தாக்குதல்களில் இந்தியாவின் தலையீடுகள் இருப்பதாக குற்றம் சாட்டுகிறது.
இந்த நிலையில் இது தொடர்பான ஆவணம் ஒன்றை நியூயார்க் நகரில் ஐ.நா.சபையின் புதிய பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரஸ்சை ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் நிரந்தர பிரதிநிதி மாலீஹா லோதி நேற்று முன்தினம் சந்தித்து ஒப்படைத்தார்.
அத்துடன் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் வழங்கிய கடிதமும் ஒப்படைக்கப்பட்டது.