ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழைகள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் – பிரதமர் மோடி

287 0

201701080605059113_poor-the-first-priority-for-bjp-pm-narendra-modi_secvpfஉயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையை ஏழை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா தேசிய செயற்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் ஆரம்பமானது.

இதில் உரையாற்றிய பிரதமர், ஊழல், கருப்புபணத்தை ஒழிப்பதற்கான நீண்டகால நடவடிக்கையின் ஒரு பகுதிதான், உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு புழக்கத்தில் இருந்து நீக்கியது.

இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை ஆகும்.

ஊழல் சமூகத்துக்கு எதிரான மிகப்பெரிய தீங்கு.

ஒழுங்குமுறையற்ற பணப்புழக்கம் லஞ்ச ஊழலை ஒழிப்பதற்கு தடையாக விளங்குகிறது.

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டன.

பல்வேறு அசவுகரியங்கள் ஏற்பட்ட போதிலும் ஏழைகள் மத்திய அரசின் நடவடிக்கையை மனதார ஏற்றுக்கொண்டு உள்ளனர்.

இந்த பிரச்சினையில் அரசின் நோக்கத்தை புரிந்து கொண்டு மனஉறுதியுடன் ஒத்துழைக்கும் மக்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் மோடி குறிப்பிட்டார்.