இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

432 0

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாரினால் இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதுடன் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான குழுவினர் இரண்டு வீடுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை முற்றுகையிட்டனர்.

இதன்போது உற்பத்தி செய்யப்பட்ட 30,000 மில்லி லீற்றர் கசிப்பு மீட்கப்பட்டதுடன் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.பி.எஸ்.பி. பண்டார தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனையினை தடுக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவு தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.