கோம்பயன்மணல் மயான மின் தகனத்துக்கு கட்டண மாற்றம்!

172 0

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட கோம்பயன்மணல் மின் தகன மயானத்தில் தகனம் செய்யப்படும் சடலங்களுக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு, மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் மின் தகன கட்டணத்தில் மாற்றம் செய்வதற்கு சபை அனுமதி வழங்கியுள்ளது.