3000 டொலர் பெறுமதியான பூனையை தேடும் ரோஹித ராஜபக்ஷ

231 0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கடைசி மகனான ரோஹித ராஜபக்ஷவின் (Rohitha Rajapaksa) பூனை காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

பெத்தகானே பிரதேசத்தில் உள்ள வீட்டில் இருந்த பெறுமதியான இந்த பூனையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு விசேட பரிசு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளார்.

ரோஹித ராஜபக்ஷ வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள பூனை Turkish Angora வகையை சேர்ந்ததாகும். Turkish Angora ஒரு பழங்கால, இயற்கை பூனை இனமாகும், இது மத்திய அனடோலியாவில் (இன்றைய துருக்கி, அங்காரா பகுதியில்) தோன்றியது.

17 ஆம் நூற்றாண்டு வரை இந்த வகை பூனைகளின் இனப்பெருக்கம் காணப்பட்டதற்கான பதிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இனப் பூனைகள் Angora அல்லது Ankara பூனைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

Turkish Angora பூனைகளின் விலை சராசரியாக 900-1500 டொலர்களாகும். எனினும் உயர் இனம், நிலையான உடலமைப்பு, அழகான இனங்கள் மற்றும் நன்கு அறியப்பட்ட இனப்பெருக்கம் பண்ணைகளில் இருந்து விற்பனை செய்யப்படும் Turkish Angora பூனைகள் 1800 முதல் 3000 டொலர் வரையான விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது