இலங்கை மத்திய வங்கியினால் நுண் நிதி திட்டங்கள் – விழிப்புணர்வு கருத்தரங்கு முல்லைத்தீவில்!

295 0
unnamed-2முல்லைத்தீவு  மக்கள் வங்கியின்  ஏற்பாட்டில் நுண் நிதி திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு  வெள்ளிக்கிழமை  கரைதுறைப்பற்று  பிரதேசசபை கேட்ப்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தனியார் நுண்நிதி நிறுவனங்களினால்  அதிக வட்டி வீதத்தில் வழங்கப்படும் கடன்களை ஏழை மக்கள் பெற்றுக்கொள்வதனால் உரிய காலப்பகுதிகளிற்கு அதனை மீள செலுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்படுவதும்  முல்லைத்தீவு மாவட்டத்தின் குடும்பங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு அண்மைக்காலமாக  பல தற்கொலைகளும் இடம்பெற்று வருகின்றது.
இந்த நுண் நிதி திட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும்  வகையிலும் தற்போது நாட்டில்  காணப்படும்  போலி நாணய தாள்கள்,பிரமிட்  திட்டங்கள் தொடர்பாகவும்  மக்களுக்கு விளக்கமளிக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு இங்கு இடம்பெற்றது.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில்  இலங்கை மத்தியவங்கி நுண்பாக நிதியிடல் இயக்குனர் ம.பாஸ்கரன் வறுமை ஒழிப்பு கடன் திட்ட பொறுப்பதிகாரி ஸ்ரீ பத்மநாதன் மற்றும் மக்கள் வங்கியின் முல்லைத்தீவு கிளை முகாமையாளர் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள், மாதர் அமைப்புகள் ஆகியோருக்கு விழிப்புணர்வு கருத்தரங்குகளை முன்னெடுத்தனர்.
unnamed-1 unnamed-2 unnamed-3 unnamed-4 unnamed-5 unnamed-6 unnamed-7 unnamed-8 unnamed-9 unnamed-10 unnamed-11 unnamed-12 unnamed-13 unnamed