உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படாவிடின் நாம் தலையிடுவோம் – கத்தோலிக்க சபை

221 0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படாவிட்டால், நாங்கள் தலையிடுவோம் என கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படாவிட்டால் கத்தோலிக்க சபையின் ஊடாக குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடரலாமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக கத்தோலிக்க சபையின் பேச்சாளரான சிறில் காமினி பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டறிய கத்தோலிக்க சபையினால் மேற்கொள்ளப்படும் போராட்டம் முழு நாட்டுக்கும் செய்யப்படும் ஒன்று என்றும், அது எவ்வளவு காலம் எடுத்தாலும் எவ்வளவு விலை செலுத்த வேண்டியிருந்தாலும் போராட்டத்தைக் கைவிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டம் ஜனநாயகமாகவும் அமைதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் முன்னெடுக்கப்படும் என கொழும்பில் பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யலாமா அல்லது ஆணைக்குழுவின் ஹன்சாட் அறிக்கைகள் மற்றும் நாடாளுமன்ற விவாதத்தின் அடிப்படையில் கத்தோலிக்க சபை வழக்குத் தாக்கல் செய்யலாமா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.