நல்லாட்சி அரசின் 2ஆம் ஆண்டு பூர்த்தி – முல்லைத்தீவில் சர்வமத பிரார்தனை!

278 0
dsc_09181இலங்கையின் ஜனாதிபதி மைதிரிபால சிறீசேன  ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவை முன்னிட்டும், நல்லாட்சி அரசின் இரண்டாட்டு நிறைவை முன்னிட்டும்  முல்லைத்தீவு  மாவட்ட செயலகத்தில்  சர்வமத பிரார்த்தனை  சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  பௌத்த மத துறவி மற்றும் முல்லைத்தீவு பங்குத்தந்தை முல்லைத்தீவு பெரிய பள்ளிவாசல் மௌலவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் தேவஸ்தான பிரதம குருக்கள்  ஆகியோர் ஜனாதிபதிக்கு ஆசிவேண்டி சர்வமத பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
இந்த சர்வமத பிரார்த்தனையில் மாவட்டசெயலாளர் பிரதம கணக்காளர் அதிகாரிகள் பொதுமக்களென பலரும் கலந்தகொண்டனர்.
dsc_09111 dsc_09181 unnamed-1 unnamed