ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட இந்தியர் விடுதலை

168 0

மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா விடுதலை செய்யப்பட்டு தற்போது தனது மூத்த சகோதரர் அசோக் லாலுடன் இருப்பதாக இந்திய உலகம் மன்றத்தின் தலைவர் புனீத் சிங் சந்தோக் தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்ரீலால் அரிண்டா (வயது 50). இந்தியரான இவர் அங்கு மருத்துவ பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

கடந்த 14-ந்தேதி வழக்கம் போல கடைக்கு சென்ற இவரை, கடைக்கு அருகே வைத்து மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். துப்பாக்கி முனையில் அரங்கேற்றப்பட்ட இந்த கடத்தல் சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டெல்லியில் வசித்து வரும் பன்ஸ்ரீலால் அரிண்டாவின் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில், அவரை மீட்பதற்கு மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வந்தது. ஆப்கானிஸ்தானில் தற்போது தலீபான்கள் ஆட்சியமைத்து உள்ளதால், பன்ஸ்ரீலாலின் கதி என்ன? என்பது தெரியாமல் அனைத்து தரப்பினரும் அச்சத்துடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில், கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா நேற்று காலையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது தனது மூத்த சகோதரர் அசோக் லாலுடன் இருப்பதாக இந்திய உலகம் மன்றத்தின் தலைவர் புனீத் சிங் சந்தோக் தெரிவித்து உள்ளார்.

இது பன்ஸ்ரீலாலின் குடும்பத்துக்கு பெருத்த நிம்மதியை கொடுத்து உள்ளது.