கலப்பு நீதிமன்றம் இன்னும் 9 மாதங்களில்!

391 0

000_Par7970330-e1410167264994-1போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளுக்காக சர்வதேச நீதிபதிகளைக்கொண்ட கலப்பு நீதிமன்றத்தை அமைக்க ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்காவுக்கு 9 மாதங்கள் கால அவகாசமாக வழங்கியுள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயன்படுத்திய 5 சர்வதேச நீதிபதிகளே கலப்பு நீதிமன்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐநா மனித உரிமையாளருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

இன்னும் ஒன்பது மாதங்களில் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்கி அதில் எப்படி விசாரணை நடாத்தப்படுகின்றது என்பதை அவதானிக்கவுள்ள மனித உரிமை ஆணையாளர், அது தொடர்பான முழுமையான அறிக்கையொன்றை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் வெளியிடவுள்ளார்.

இதன்காரணமாக, கலப்பு நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தென்ஆபிரிக்காவை முன்னுதாரணமாகக் கொண்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு செப்டெம்பர் மாதம் உருவாக்கப்படவுள்ளது. இவ் ஆணைக்குழுவுக்கு தவறுகளை மன்னிக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.