பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது- இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்

155 0

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சந்தையில் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக அந்தசங்கம் அறிவித் துள்ளது.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில நிறுவனங்கள் மாவைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

தற்போது சந்தையில் 107 ரூபாவுக்கு அதிகமாகக் கோதுமை மா விற்பனை செய்யப்படுவதாகவும்,இதன் காரணமாக பேக்கரி களின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எனவே இதன் காரணமாக பேக்கரி உற்பத்தி பொருட் களுக்கான விலை மேலும் அதிகரிக்கப்படும் நிலை யேற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.